டி.ராஜேந்தருக்கு வெளிநாட்டில் சிகிச்சை; முன்னேற்பாடுகளை மேற்கொள்ள நடிகர் சிம்பு அமெரிக்கா பயணம்


டி.ராஜேந்தருக்கு வெளிநாட்டில் சிகிச்சை; முன்னேற்பாடுகளை மேற்கொள்ள நடிகர் சிம்பு அமெரிக்கா பயணம்
x

நடிகர் சிம்பு தன்னுடைய தந்தை டி. ராஜேந்தரின் சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்வதற்காக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார்.

சென்னை,

நடிகர் சிம்பு தன்னுடைய தந்தை டி. ராஜேந்தரின் சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்வதற்காக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார்.

நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தருக்கு கடந்த மாதம் 19-ம்தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். பரிசோதித்த டாக்டர்கள், இதயத்துக்கு செல்லக் கூடிய ரத்த குழாயில் அடைப்பு இருப்பதைக் கண்டனர்.

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று டி.ராஜேந்தரை சந்தித்து நலம் விசாரித்தார். இந்நிலையில் வயிற்றுப் பகுதியில் ஏற்பட்டுள்ள ரத்தக் கசிவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை பெற டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் அவருக்கு அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக சென்னையில் இருந்து டி.ஆர். நாளை மறுதினம் அமெரிக்கா புறப்பட்டு செல்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, அவருக்கான மருத்துவ ஏற்பாடுகளை கவனிப்பதற்காக கடந்த சில தினங்களுக்கு முன் நடிகர் சிம்பு, முன்னதாக அமெரிக்கா சென்றுள்ளார்.


Next Story