'வெற்றி எனக்கு இதனால் மட்டும் கிடைக்கவில்லை' - நடிகை டாப்சி


வெற்றி எனக்கு இதனால் மட்டும் கிடைக்கவில்லை - நடிகை டாப்சி
x

image courtecy:instagram@taapsee

நான் இருக்கும் இடத்தை நினைத்து சந்தோஷமாக உள்ளது என்று நடிகை டாப்சி கூறினார்.

சென்னை,

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை டாப்சி. இவர் சமீபத்தில் டென்மார்க்கை சேர்ந்த பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மணக்கோலத்தில் இருவரும் இருந்த வீடியோகள் வைரலாகி திருமணம் நடந்ததை உறுதி செய்தன.

இந்நிலையில், நடிகை டாப்சி வாழ்க்கையில் இந்த அளவிற்கு முன்னேறி வந்தது குறித்து பேசியுள்ளார். அது குறித்து அவர் பேசியதாவது,

நான் தற்போது அடைந்துள்ள வெற்றி எனக்கு அதிர்ஷ்டத்தால் மட்டும் கிடைக்கவில்லை. மிகவும் கடினமாக உழைத்து தினமும் என்னை நானே உத்வேக படுத்திக்கொண்டு வாழ்க்கையில் இந்த அளவிற்கு முன்னேறியுள்ளேன். இப்போது நான் இருக்கும் இடத்தை நினைத்து சந்தோஷமாக உள்ளது. தற்போது எனக்கு சிறிது ஓய்வு தேவைப்படுகிறது. இவ்வாறு கூறினார்

திருமணத்திற்கு பின்பு நடிகை டாப்சி, நல்ல கதை வந்தால் மட்டுமே நடிப்பேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது


1 More update

Next Story