ஆர்யா நடிக்கும் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படத்தின் டீசர் வெளியானது..!


ஆர்யா நடிக்கும் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தின் டீசர் வெளியானது..!
x

ஆர்யா நடிக்கும் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

சென்னை,

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் திரைப்படம் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்'. இந்த படத்தில் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான சித்தி இத்னானி கதாநாயகியாக நடிக்கிறார்.

ராமநாதபுரம் பின்னணியில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் வெளியாகி உள்ள இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story