பரத் -வாணி போஜன் நடித்துள்ள 'லவ்' படத்தின் டீசர் வெளியானது


பரத் -வாணி போஜன் நடித்துள்ள லவ்  படத்தின் டீசர் வெளியானது
x

இந்த டீசர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

சென்னை,

நடிகர் பரத் தற்போது 'லவ்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. திரில்லர் கதை அம்சம் கொண்ட இப்படத்தில் பரத்திற்கு ஜோடியாக வாணி போஜன் நடித்திருக்கிறார். இவர்களுடன் விவேக் பிரசன்னா, பிக்பாஸ் புகழ் டேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஆர்.பி.பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை லுசிபர், மரைக்காயர், குருப் உள்ளிட்ட பல படங்களுக்கு தமிழில் வசனங்கள் மற்றும் பாடல்களை எழுதிய ஆர்.பி.பாலா இயக்குகிறார். மேலும், இப்படத்திற்கு ரோனி ரபேல் இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் ஆர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டீசர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.


Next Story