வைபவ் நடிக்கும் 'ரணம்' படத்தின் டீசர் வெளியானது..!


வைபவ் நடிக்கும் ரணம் படத்தின் டீசர் வெளியானது..!
x

வைபவ் நடித்துள்ள 'ரணம்' திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

சென்னை,

நடிகர் வைபவ் நடிக்கும் 25-வது படத்தை இயக்குனர் ஷெரிப் இயக்குகிறார். இந்த படத்துக்கு 'ரணம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் நந்திதா ஸ்வேதா, தான்யா ஹோப், சரஸ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி, பதமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மிதுன் மித்ரா புரொடக்சன்ஸ் சார்பில் மது நாகராஜன் தயாரித்துள்ள இந்த படத்துக்கு அரோல் கொரல்லி இசையமைத்துள்ளார். பாலாஜி கே ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story