கீர்த்தி ஷெட்டியைத் தேடும் தெலுங்குப் பட உலகம்

தெலுங்குப் பட படவுலகையே மறக்கும் அளவுக்குக் கீர்த்தி ஷெட்டியின் கையில் தமிழ், மலையாளப் படங்கள் நிறைந்து கிடக்கின்றன.
நடிகை மமிதாவுக்கு முன்பே 'வணங்கான்' படத்துக்கு தேர்வானார் கீர்த்தி ஷெட்டி. அவரைத்தான் முதலில் பாலா தேர்வு செய்தார். அவரும் சூர்யா ஜோடியாக நடிப்பதால் சந்தோஷமாகவே ஒப்புக்கொண்டார். ஆனால், பாலாவிடம் அடி நிச்சயம் என்பதைக் கேள்விப்பட்டதும் இப்போதைக்குத் தமிழ்ப் படம் வேண்டாம் என்று ஆந்திராவிலேயே தங்கிவிட்டார்.
அதன்பிறகு கீர்த்தி விஜய்சேதுபதியின் மகளாக நடித்த 'உப்பண்ணா' தெலுங்குப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. நானியுடன் நடித்த 'ஷியாம் சிங்க ராய்' படத்தில் கீர்த்தியின் அழகை ரசிகர்கள் சிலாகிக்கப் போய், லிங்குசாமி தனது 'தி வாரியர்' படத்தின் தெலுங்கு, தமிழ் வெர்சன்களுக்கு அவரை ஒப்பந்தம் செய்தார். அந்தப் படத்தின் புல்லட் சாங் மூலமாக தமிழில் ஹிட்டானார் கீர்த்தி ஷெட்டி.
இப்போது தனது தாய்மொழிப் படவுலகையே மறக்கும் அளவுக்குக் கீர்த்தியின் கையில் தமிழ், மலையாளப் படங்கள் நிறைந்து கிடக்கின்றன. ஜெயம் ரவி ஜோடியாக அவர் நடித்துள்ள 'ஜீனி' ரிலீஸுக்குத் தயாராகிவிட்டது. அதைவிட அதிரடியான அடுத்தப் படம் விக்னேஷ் சிவன் இயக்கும் 'எல்.ஐ.சி'. இதில் 'லவ் டுடே' புகழ் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி. மலையாளத்தில் டோவினோ தாமஸ் ஜோடியாக ஜிதின் லால் இயக்கத்தில் உருவாகி வரும் 'அஜயண்டே ரெண்டாம் மோஷனம்' என்ற படத்தில் நடித்து முடித்து விட்டார் கீர்த்தி ஷெட்டி.