திரும்பிப் பார்க்க வைத்த ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன்
‘ஒ2’ படம் மூலம் இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன்.
வெங்கட் பிரபுவின் 'மன்மத லீலை' படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர், தமிழ் அழகன். அந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் 18 நாட்களில் முடித்து கோலிவுட்டை வியப்பில் ஆழ்த்தியவர், இவர். இவருடைய அடுத்த படமான 'ஒ2' மூலம் இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்து இருக்கிறார்.
நிலச்சரிவில் சிக்கிய பயணிகள் பஸ் ஒன்று மண்ணுக்குள் புதைந்து போவது போலவும், அதை மீட்பு படையினர் மீட்பது போலவும் கதையம்சம் கொண்ட படம், அது. ஜி.எஸ்.விக்னேஷ் டைரக்டு செய்ய, ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்தது. இதில் நயன்தாரா கதாநாயகியாக நடித்து இருந்தார்.
"2 வருட உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம், இது" என்கிறார், ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன்.
Related Tags :
Next Story