ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் 'சிங்கப்பூர் சலூன்' படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியானது..!


ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் சிங்கப்பூர் சலூன் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியானது..!
x

ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள 'சிங்கப்பூர் சலூன்' திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னை,

ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்துக்கு 'சிங்கப்பூர் சலூன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை 'ரவுத்திரம்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'காஷ்மோரா' உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இயக்குகிறார். ஆர்.ஜே.பாலாஜி இந்த படத்தில் சிகையலங்கார நிபுணராக நடிக்கிறார்.

இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். விவேக் மெர்வின் இசையமைக்கிறார். இந்த படத்தில் சத்யராஜ், ரோபோ சங்கர், கிஷன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி 'சிங்கப்பூர் சலூன்' திரைப்படம் வருகிற ஜூலை மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.



Next Story