விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது..!


விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது..!
x

நடிகர் விக்ரம் பிரபு நடிக்கும் 'இரத்தமும் சதையும்' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

சென்னை,

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'டாணாக்காரன்'. இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விக்ரம் பிரபு அடுத்ததாக நடிக்கும் புதிய படத்திற்கு 'இரத்தமும் சதையும்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஹரேந்தர் பாலசந்தர் இயக்குகிறார். தயாரிப்பாளர் கார்த்திக் தயாரிக்கிறார். இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் சமீபத்தில் தொடங்கி, முழு வீச்சில் நடந்து வருகிறது. அடுத்த மாதம் படப்பிடிப்பை தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்த திரைப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.



Next Story