'பாவனா 86' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது.!


பாவனா 86 படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது.!
x

'பாவனா 86' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

சென்னை,

மலையாள திரையுலகின் முன்னனி நடிகையான பாவனா, 2006-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 'சித்திரம் பேசுதடி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின்னர் வெயில், தீபாவளி, கூடல் நகர், ஜெயம் கொண்டான், அசல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் பாவனா பிசியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை பாவானாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் 86-வது படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்துக்கு 'தி டோர்' (The Door) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை ஜெய்தேவ் இயக்குகிறார்.

ஜூன் டிரீம்ஸ் சார்பில் நவீன் ராஜன் தயாரிக்கும் இந்த திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.




1 More update

Next Story