ஆந்திர முதல்-மந்திரி கதாபாத்திரத்தில் ஜீவா நடிக்கும் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் நாளை வெளியாகிறது..!


ஆந்திர முதல்-மந்திரி கதாபாத்திரத்தில் ஜீவா நடிக்கும் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் நாளை வெளியாகிறது..!
x

ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் ஜீவா நடிக்கும் 'யாத்ரா-2' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் நாளை வெளியாக உள்ளது.

மறைந்த ஆந்திர முதல்-மந்திரி ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி வாழ்க்கை 'யாத்ரா' என்ற பெயரில் 2019-ல் திரைப்படமாக வெளிவந்தது. இதில் ராஜசேகர ரெட்டி கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்து இருந்தார். இதன் தொடர்ச்சியாக ராஜசேகர ரெட்டியின் மகனும் தற்போதைய ஆந்திர முதல்-மந்திரியுமான ஜெகன் மோகன் ரெட்டி வாழ்க்கை கதை 'யாத்ரா-2' என்ற பெயரில் உருவாகி வருகிறது.

இதில் ஜெகன் மோகன் ரெட்டியின் கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடிக்கிறார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'யாத்ரா-2' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெகன் மோகன் ரெட்டியின் இளம்வயது அரசியல் வாழ்க்கையில் இருந்து ஆந்திர முதல்-மந்திரியானது வரை நடந்த சம்பவங்கள் இந்த படத்தில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.





Next Story