நித்யா மேனன் நடிக்கும் 'டியர் எக்ஸஸ்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது


நித்யா மேனன் நடிக்கும் டியர் எக்ஸஸ் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது
x
தினத்தந்தி 8 April 2024 11:59 PM IST (Updated: 9 April 2024 12:00 AM IST)
t-max-icont-min-icon

நித்யா மேனன் பிறந்தநாளை முன்னிட்டு 'டியர் எக்ஸஸ்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு உள்ளது.

சென்னை,

முன்னணி நடிகையான நித்யா மேனன் தற்போது அறிமுக இயக்குனர் காமினி இயக்கத்தில் 'டியர் எக்ஸஸ்' என்ற படத்தில் நடித்து வருகிறார். பேண்டசி ரொமான்ஸ் காமெடி திரைப்படமாக உருவாகி வரும் இந்த படத்தில், பிரதீக் பாபர், வினய் ராய், நவ்தீப், தீபக் பரம்பொல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் நித்யா மேனனின் பிறந்தநாளை முன்னிட்டு 'டியர் எக்ஸஸ்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டரை இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டார்.

போஸ்டரில் நித்யா மேனன் மஞ்சள் புடவையில் ஸ்டைலான கூலர்ஸுடன் காணப்படுகிறார். கையில் உள்ள போனில் அவரது எக்ஸ் கால் செய்வது போன்று இடம்பெற்றுள்ளது. காதல் தோல்வியில் உள்ள பெண்ணைப் பற்றிய கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


1 More update

Next Story