சில்லா சில்லா - 'துணிவு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது..!


சில்லா சில்லா - துணிவு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது..!
x

'துணிவு' திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி உள்ளது.

சென்னை,

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'துணிவு'. இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

துணிவு திரைப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

'துணிவு' படத்தின் முதல் பாடலான 'சில்லா சில்லா' பாடல் டிசம்பர் 9-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில் இந்த பாடல் தற்போது வெளியாகி உள்ளது. ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த பாடலை அனிரூத் பாடியுள்ளார். மேலும் இந்த பாடலை வைசாக் எழுதியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



Next Story