யோகி பாபு நடித்துள்ள 'பொம்மை நாயகி' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது


யோகி பாபு நடித்துள்ள பொம்மை நாயகி படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது
x

யோகி பாபு நடித்துள்ள 'பொம்மை நாயகி' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது.

சென்னை,

இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் 'பொம்மை நாயகி'. இயக்குனர் ஷான் எழுதி, இயக்கியுள்ள இந்த படத்தில் முன்னணி காமெடி நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு கே எஸ் சுந்தர மூர்த்தி இசையமைக்க, அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், 'பொம்மை நாயகி' படத்தின் முதல் பாடலான 'அடியே ராசாத்தி' என்ற பாடல் வெளியாகி உள்ளது. பாடலாசிரியர் கபிலன் எழுதி சத்யபிரகாஷ் பாடியுள்ள இந்த பாடல் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த திரைப்படம் வருகிற பிப்ரவரி 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story