'சந்திரமுகி -2' படத்தின் முதல் பாடல் வெளியீடு

இப்பாடல் வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
'சந்திரமுகி -2' படத்தின் முதல் பாடல் வெளியீடு
Published on

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். 'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது. சமீபத்தில் லாரன்ஸ் மற்றும் கங்கனா ரனாவத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது.

இதையடுத்து இப்படத்தின் முதல் பாடலான 'ஸ்வாகதாஞ்சலி' பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்பாடல் வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com