'அயோத்தி' இயக்குனரின் அடுத்த படத்தின் புதிய தகவல்
'அயோத்தி' திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
சென்னை,
அறிமுக இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்தாண்டு மார்ச் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'அயோத்தி'. இந்த படத்தில் 'குக் வித் கோமாளி' புகழ், ப்ரீத்தி அஸ்ராணி, யாஷ்பால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மனிதத்தையும் மத நல்லிணக்கத்தையும் பற்றி பேசிய இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்றது.படத்தை பார்த்து ரஜினி உள்பட நிறைய திரைப்பிரபலங்கள் படத்தை பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். அயோத்தி திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அயோத்தி படம் வெளியாகி 1 வருடம் கடந்த நிலையில் அப்படத்தின் இயக்குனரான மந்திர மூர்த்தி இயக்கும் அடுத்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் சார்பாக சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிக்கவுள்ளார். இதற்கு முன் ஆண்டவன் கட்டளை, மருது, தங்க மகன் போன்ற வெற்றி படங்களை கோபுரம் பிலிம்ஸ் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் யார் நடிக்க போகிறார்கள் எம்மாதிரியான கதைக்களம் கொண்ட திரைப்படம் போன்ற தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.