ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது பார்க்கிங் திரைப்படம்


ஓடிடி தளத்தில்  நாளை வெளியாகிறது பார்க்கிங் திரைப்படம்
x
தினத்தந்தி 29 Dec 2023 10:14 AM GMT (Updated: 29 Dec 2023 12:01 PM GMT)

சிறிய பட்ஜெட்டில் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது

சென்னை,

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள திரைப்படம் 'பார்க்கிங்'. திரில்லர் டிராமாவான இந்த திரைப்படத்தை 'பலூன்' பட இயக்குனர் கே.எஸ்.சினிஷ், சோல்ஜர்ஸ் பேக்டரி சார்பில் தயாரித்துள்ளார். மேலும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.இப்படத்தின் கதாநாயகியாக இந்துஜா நடித்துள்ளார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சிறிய பட்ஜெட்டில் உருவான இப்படம் டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் வசூலையும் குவித்தது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் ஓடிடி ரிலீஸிற்காக ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில், அதன்படி, 'பார்க்கிங்' திரைப்படம் நாளை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.


Next Story