'இதனால்தான் ஹாரர் படங்களை பார்ப்பதில்லை' - நடிகை மமிதா பைஜு


The response for Premalu was way bigger than that we had expected
x

தற்போது மமிதா பைஜு, விஷ்ணு விஷால் ஜோடியாக புதிய படத்தில் நடித்து வருகிறார்.

சென்னை,

மலையாளத்தில் வெளியாகி ரூ.100 கோடிக்கு மேல் வசூல் குவித்த 'பிரேமலு' படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை கொத்தாக அள்ளிய இளம் கதாநாயகி மமிதா பைஜுவுக்கு பட வாய்ப்புகள் குவிகின்றன.

தமிழில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக 'ரெபல்' படத்திலும் நடித்தார். தற்போது விஷ்ணு விஷால் ஜோடியாக புதிய படத்தில் நடித்து வருகிறார். தென் இந்திய திரையுலகில் மளமளவென முன்னேறி வருகிறார்.

இந்நிலையில், சினிமா வாழ்க்கை குறித்து பகிர்ந்து கொண்டார். அவர் பேசியதாவது,

'சினிமா எனக்கு மிகவும் பிடிக்கும். அதிகமாக படம் பார்க்காவிட்டாலும் ஒரு படம் பார்க்கும்போது முழுக்க முழுக்க அதில் மூழ்கிவிடுவேன். கிட்டத்தட்ட ஒரு வாரம் வரை அது மனதில் நிற்கும். அந்தப் படத்தைப் பற்றி யோசித்துக்கொண்டே இருப்பேன். அதனால்தான் அதிகம் ஹாரர் படங்கள் பார்ப்பதில்லை.

ரெபல் என்னுடைய முதல் தமிழ் படம். அதில் பணிபுரிந்தது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. ஒரு படத்துக்கு ஓகே சொல்ல நிறைய நேரம் எடுத்துக்கொள்கிறேன். ஒரு படத்துக்கு சீக்கிரம் கையெழுத்து போடச் சொன்னாலும், கொஞ்சம் டைம் வேணும் என்று சொல்கிறேன். அழுத்தம் கொடுக்கும்போது, நான் எடுக்கும் முடிவு தவறாகிவிடும், என் முடிவில் நான் திருப்தியடைய மாட்டேன். நடிகர்கள் படம் பண்ணலாமா வேண்டாமா என்று மிக விரைவாக முடிவெடுப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது'. இவ்வாறு கூறினார்.


Next Story
  • chat