'சிறுத்தை' சிவா டைரக்‌ஷனில் 'சூர்யா 42' படப்பிடிப்பு தொடங்கியது


சிறுத்தை சிவா டைரக்‌ஷனில் சூர்யா 42 படப்பிடிப்பு தொடங்கியது
x

‘சிறுத்தை’ சிவா டைரக்‌ஷனில் ‘சூர்யா 42’ படப்பிடிப்பு தொடங்கியது.

'சிறுத்தை' சிவா டைரக்‌ஷனில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இந்தப் படத்துக்கு தற்காலிகமாக 'சூர்யா 42' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. சிவாவும், சூர்யாவும் இணையும் முதல் படம் இது. கே.ஈ.ஞானவேல் ராஜா, வம்சி பிரமோத் இணைந்து தயாரிக்கிறார்கள். இது, ஞானவேல்ராஜாவின் 25-வது படம் ஆகும். படத்துக்கு படம் வெற்றியை தக்கவைத்துக் கொள்ளும் டைரக்டர் சிவா, தனது முந்தைய படங்களில் இருந்து மாறுபட்ட கதையம்சம் உள்ள படத்தை தர இருக்கிறார்.

கதாநாயகியாக இந்தி நடிகை திஷா பதானி நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, மதன் கார்க்கி வசனம் எழுதுகிறார்.


Next Story