துல்கர் சல்மான் நடித்துள்ள 'லக்கி பாஸ்கர்' படத்தின் டீசர் நாளை வெளியாகிறது


துல்கர் சல்மான் நடித்துள்ள லக்கி பாஸ்கர் படத்தின் டீசர் நாளை வெளியாகிறது
x

வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் படத்துக்கு 'லக்கி பாஸ்கர்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'வாத்தி' திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றி படமாக அமைந்தது. தற்போது நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் படத்தை வெங்கி அட்லூரி இயக்குகிறார்.

இந்த படத்துக்கு 'லக்கி பாஸ்கர்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். சித்தாரா எண்டர்டெயின்மென்ட் மற்றும் பார்ச்சூன் 24 ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்தது. இந்த நிலையில், இந்த படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, 'லக்கி பாஸ்கர்' படத்தின் டீசர் நாளை (ஏப்ரல் 11) வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story