பாபி சிம்ஹா நடித்துள்ள 'வசந்த முல்லை' படத்தின் டிரைலர் வெளியானது


பாபி சிம்ஹா நடித்துள்ள வசந்த முல்லை படத்தின் டிரைலர் வெளியானது
x

பாபி சிம்ஹா நடித்துள்ள 'வசந்த முல்லை' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

சென்னை,

குறும்பட இயக்குனர் ரமணன் புருசோத்தமா இயக்கத்தில் பாபிசிம்ஹா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'வசந்த முல்லை'. இந்த படத்தில் பாபிசிம்ஹாவுக்கு ஜோடியாக, காஷ்மீரா பர்தேசி நடித்துள்ளார். மேலும் நடிகர் ஆர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

எஸ்.ஆர்.டி. எண்டர்டைன்மென்ட் மற்றும் முத்ராஸ் பிலிம் பேக்டரி இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். அதிரடி திரில்லர் வகை படமாக 'வசந்த முல்லை' திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 3 மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது. 'வசந்த முல்லை' திரைப்படம் வருகிற 10-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story