ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் 'கலியுகம்' படத்தின் டிரைலர் வெளியானது..!


ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் கலியுகம் படத்தின் டிரைலர் வெளியானது..!
x

ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ள 'கலியுகம்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

சென்னை,

இயக்குனர் பிரமோத் சுந்தர் இயக்கத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'கலியுகம்'. மேலும் இந்த படத்தில் கிஷோர், இனியன் சுப்ரமணி, ஹாரி, அஸ்மல், சந்தோஷ், மணி, ஆர்ய லெக்ஷ்மி, மோசஸ், மாஸ்டர் ரோனித் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஆர்கே இன்டர்நேஷனல் மற்றும் பிரைம் சினிமாஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு கே.ராம்சரண் ஒளிப்பதிவு செய்துள்ளார். நிம்ஸ் படத்தொகுப்பு செய்கிறார். இந்த திரைப்படத்தின் கதை 2064-ம் ஆண்டில் நடப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டிரைலரை நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

1 More update

Next Story