சிவகார்த்திகேயன் நடிப்பில் 'மாவீரன்' படத்தின் டிரைலர் வெளியானது


சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன்  படத்தின் டிரைலர் வெளியானது
x
தினத்தந்தி 2 July 2023 2:31 PM GMT (Updated: 2 July 2023 2:32 PM GMT)

டிரைலர் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

சென்னை,

சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாவீரன்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர்.

இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 'மாவீரன்' திரைப்படம் வருகிற ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் படக்குழு படத்தின் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில் 'மாவீரன்' திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கான டப்பிங் பணி நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் மாவீரன் படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி இரவு 8 மணிக்கு மாவீரன் படத்தின் டிரைலர் வெளியானது . இந்த டிரைலர் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.


Next Story