சசிகுமார் நடித்துள்ள 'அயோத்தி' படத்தின் டிரைலர் வெளியானது
சசிகுமார் நடித்துள்ள 'அயோத்தி' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
சென்னை,
நடிகர் சசிகுமார் தற்போது இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் 'அயோத்தி' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் 'குக் வித் கோமாளி' புகழ், ப்ரீத்தி அஸ்ராணி, யாஷ்பால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
டிரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு என்.ஆர்.ரகுநாதன் இசையமைத்துள்ளார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். மதப்பிரச்சினைகளை பேசும் படமாக 'அயோத்தி' உருவாகியுள்ளது.
இந்த நிலையில் 'அயோத்தி' திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Related Tags :
Next Story