சதீஷ் நடித்துள்ள 'கான்ஜுரிங் கண்ணப்பன்' படத்தின் டிரைலர் வெளியானது..!


சதீஷ் நடித்துள்ள கான்ஜுரிங் கண்ணப்பன் படத்தின் டிரைலர் வெளியானது..!
x

சதீஷ் நடித்துள்ள 'கான்ஜுரிங் கண்ணப்பன்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

சென்னை,

அறிமுக இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம், 'கான்ஜுரிங் கண்ணப்பன்'. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில், சதீஷ், நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்தராஜ், ரெஜினா கஸாண்ட்ரா, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, எல்லி அவ்ரம், ஜேஸன் ஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்துக்கு எஸ்.யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார். காமெடி ஹாரர் பாணியில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story