சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படகுழு அறிவிப்பு


சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படகுழு அறிவிப்பு
x

இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

சென்னை,

இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'பிரின்ஸ்' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

, இப்படம் அக்டோபர் மாதம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


Next Story