விஷால் நடித்துள்ள 'லத்தி' படத்தின் டிரைலர் வெளியானது...!


விஷால் நடித்துள்ள லத்தி படத்தின் டிரைலர் வெளியானது...!
x
தினத்தந்தி 12 Dec 2022 12:11 PM GMT (Updated: 12 Dec 2022 12:11 PM GMT)

விஷால் நடித்துள்ள 'லத்தி' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

சென்னை,

வீரமே வாகை சூடும்' படத்திற்கு பிறகு நடிகர் விஷால் நடித்திருக்கும் திரைப்படம் 'லத்தி'. இதனை அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கியிருக்கிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்திருக்கிறார். 'ராணா புரொடக்ஷன்' சார்பாக ரமணா மற்றும் நந்தா இப்படத்தை தயாரிக்கின்றனர். 'லத்தி' திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வைரலானது.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. இதனிடையே இப்படத்தின் இரண்டாவது பாடல் 'ஊஞ்சல் மனம் ஆடுமே' வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில் லத்தி' திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்து இருந்தது. அதன்படி இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.

படம் வருகிற 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.





Next Story