விஷூவல் டிரீட் இருக்கு... வைரலாகும் 'லியோ' படத்தின் ஒளிப்பதிவாளரின் பதிவு..


விஷூவல் டிரீட் இருக்கு... வைரலாகும் லியோ படத்தின் ஒளிப்பதிவாளரின் பதிவு..
x

நடிகர் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 'மாஸ்டர்' படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். லியோ படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

'லியோ' படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உயர்தர Red V RAPTOR XL வகை கேமரா 'லியோ' படப்பிடிப்பில் பயன்படுத்தப்படுவதாக ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தன்னுடைய சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். இதற்கு 'லியோ' படத்தில் விஷூவல் டிரீட் காத்திருக்கிறது என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Next Story