மைக்கல் ஜாக்சன் மறைவுக்கு பின் வெளியான பாடல்கள் : நம்பகத்தன்மை குறித்த சர்ச்சையால் நீக்கம்..!!


மைக்கல் ஜாக்சன் மறைவுக்கு பின் வெளியான பாடல்கள் : நம்பகத்தன்மை குறித்த சர்ச்சையால் நீக்கம்..!!
x

Image Courtesy : AFP 

மைக்கல் ஜாக்சன் பாடிய பாடல்கள் என அறியப்பட்ட 3 பாடல்களை சோனி நிறுவனம் நீக்கியுள்ளது.

வாஷிங்டன்,

உலகம் முழுவதும் புகழ்பெற்ற பாப் இசைப் பாடகர் மற்றும் நடன இயக்குனர் மைக்கல் ஜாக்சன். 1980களின் துவக்கத்தில் பாப் இசை உலகில் புகழ் பெற்ற பாடகரான இவர் லட்சக்கணக்கான ரசிகர்களின் விருப்பமான இசைக்கலைஞரானார். பல சமூக தொண்டுகளுக்கு உலக முழுவதிலும் இசையரங்கு நிகழ்ச்சிகளை நடத்தி நிதியுதவி செய்துள்ளார். இவர் 2009 ஆம் ஆண்டுலாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில் தற்போது மைக்கல் ஜாக்சன் பாடிய பாடல்கள் என அறியப்பட்ட பிரேக்கிங் நியூஸ், மான்ஸ்டர் மற்றும் கீப் யுவர் ஹெட் அப் பாடல்களை சோனி மற்றும் பாப் நட்சத்திரத்தின் எஸ்டேட் தங்கள் இணையதளங்களில் இருந்து நீக்கியுள்ளது.

மைக்கல் ஜாக்சன் மறைவுக்கு ஒரு வருடத்திற்கு பிறகு இந்த 3 பாடல்கள் வெளியிடப்பட்டதால் இந்த பாடல்கள் அவர் பாடியதா என ரசிகர்கள் மத்தியில் கேள்வி இருந்தது. இதனால் தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்த பாடல்கள் குறித்த சர்ச்சை இசை உலகில் நிலவி வந்தது.

மேலும் சில ரசிகர்கள் நீண்ட காலமாக உள்ள இந்த பாடல்கள் ஜேசன் மலாச்சி என்ற அமெரிக்க பாடகருக்கு சொந்தமானது என்று வாதிட்டு வந்தனர். ஆனால் இதனை சோனி மறுத்துள்ளது. இந்த நிலையில் நம்பகத்தன்மை குறித்த கேள்வி மற்றும் சர்ச்சையால் இந்த பாடல்கள் நீக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பாடல்கள் தொடர்புடைய உரையாடலைத் கடந்து செல்வதற்கான எளிய மற்றும் சிறந்த வழி அதனை நீக்குவது தான் என சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது.


Next Story