இன்று கலைஞர் நூற்றாண்டு விழா; ரஜினி , கமல் உள்ளிட்ட திரைபிரபலங்கள் பங்கேற்பு


இன்று கலைஞர் நூற்றாண்டு விழா;  ரஜினி , கமல் உள்ளிட்ட திரைபிரபலங்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 6 Jan 2024 1:41 AM GMT (Updated: 6 Jan 2024 1:53 AM GMT)

சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பிரமாண்டமான முறையில் இந்த விழா நடைபெற உள்ளது

சென்னை,

கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் தமிழ் சினிமா வளர்ச்சியில் கருணாநிதியின் பங்களிப்பை போற்றும் விதமாக 'கலைஞர் 100 விழா' பிரமாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான ஒப்புதலும் பெறப்பட்டது. அதன்படி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த மாதம் 24 ஆம் தேதி 'கலைஞர் 100 விழா' நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் மிக்ஜம் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு அந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்திருந்தது.இந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்ட 'கலைஞர் 100 விழா' இன்று நடைபெற உள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பிரமாண்டமான முறையில் இந்த விழா நடைபெற உள்ளது விழாவில் முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் , நடிகர்கள் ரஜினி , கமல் , சூர்யா , தனுஷ், விக்ரம் , சிவகார்த்திகேயன் உள்ளிட்ட திரைபிரபலங்கள் பங்கேற்க உள்ளனர் . .

தெலுங்கில் சிரஞ்சீவி, மலையாளத்தில் மம்மூட்டி, மோகன்லால் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாக உள்ளது.

இன்று மாலை 4 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கி மொத்தம் 6 மணி நேரம் விழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் 40-க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள் நடக்கவிருக்கிறது. அது மட்டுமில்லாமல் சமீபத்தில் மறைந்த நடிகரும் , தேமுதிக தலைவருமான விஜயகாந்த்-க்கு மௌன அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

பொது மக்களுக்கு அனுமதி இலவசம் என்றாலும், முதல்-அமைச்சர் பங்கேற்கும் விழா என்பதால் இதற்கான அனுமதிச் சீட்டுக்கள் சினிமா சங்கங்கள் வழியே வழங்கப்பட்டு வருகின்றன.


Next Story