நடிகை நக்மாவுக்கு கோல்டன் விசா வழங்கிய ஐக்கிய அரபு அமீரகம்


நடிகை நக்மாவுக்கு கோல்டன் விசா வழங்கிய ஐக்கிய அரபு அமீரகம்
x

ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவின் திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது.

அபுதாபி,

ஐக்கிய அரபு அமீரக அரசு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கவுரவிக்க கோல்டன் விசா வழங்கி வருகிறது. கோல்டன் விசா வைத்து இருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவார்கள்.

இந்திய நடிகர்கள் பலருக்கு ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசா வழங்கப்பட்டு உள்ளது. இந்தி நடிகர்கள் சஞ்சய்தத், ஷாருக்கான், மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், பிருதிவிராஜ், துல்கர் சல்மான் ஆகியோர் கோல்டன் விசா பெற்றுள்ளனர். சமீபத்தில் இந்தி நடிகை ஊர்வசி ரவுடாலா, நடிகை மீரா ஜாஸ்மின் ஆகியோருக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டது.

ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசாவை பெற்ற முதல் தமிழ் நடிகை என்ற பெருமையை நடிகை திரிஷா பெற்றார். தொடர்ந்து நடிகைகள் ஜோதிகா, அமலா பால், லட்சுமி ராய், காஜல் அகர்வால், பாடகி சித்ரா மற்றும் இயக்குநரும் நடிகருமான ஆர்.பார்த்திபன், நடிகர் விஜய் சேதுபதி ஆகியோருக்கும் அமீரக அரசு கோல்டன் விசா வழங்கியுள்ளது. இந்த கோல்டன் விசாவை பெரும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை பார்த்திபன் பெற்றார்.

இந்நிலையில் நடிகை நக்மாவுக்கு கோல்டன் விசா வழங்கி ஐக்கிய அரபு அமீரக அரசு கவுரவப்படுத்தியுள்ளது. துபாயில் உள்ள அரசு சேவை வழங்கும் ஈ.சி.எச். டிஜிட்டல் நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நக்மாவுக்கு கோல்டன் விசாவை அதிகாரிகள் வழங்கினர்.


Next Story