வா செந்தாழினி... ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'அடியே' படத்தின் முதல் பாடல் வெளியானது..!


வா செந்தாழினி... ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள அடியே படத்தின் முதல் பாடல் வெளியானது..!
x

ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'அடியே' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது.

சென்னை,

ஏண்டா தலையில எண்ண வெக்கல, திட்டம் இரண்டு போன்ற படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் 'அடியே'. இந்த படத்தில் வெங்கட் பிரபு, கவுரி, மிர்சி விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மாலி மற்றும் மன்வி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சமீபத்தில் 'அடியே' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி 'வா செந்தாழினி' என்ற பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. பகவதி பி.கே எழுதியுள்ள இந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.Next Story