வடிவேலு பாடியுள்ள 'பணக்காரன்' என்ற பாடல் வெளியானது


வடிவேலு பாடியுள்ள பணக்காரன் என்ற பாடல் வெளியானது
x
தினத்தந்தி 26 Nov 2022 10:38 PM IST (Updated: 26 Nov 2022 10:39 PM IST)
t-max-icont-min-icon

வடிவேலு நீண்ட நாட்களுக்குப் பிறகு திரைத்துறைக்கு திரும்பியிருக்கும் படம் நாய் சேகர் ரிட்டன்ஸ்.

சென்னை,

நடிகர் வடிவேலு நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் திரைத்துறைக்கு திரும்பியிருக்கும் படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'. இயக்குநர் சுராஜ் இயக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ராவ் ரமேஷ், ஆனந்த்ராஜ், முனிஷ் காந்த், ரெடின் கிங்ஸ்லி, சிவாங்கி கிருஷ்ணகுமார், ஷிவானி நாராயணன், 'லொள்ளு சபா' மாறன், மனோபாலா, 'லொள்ளு சபா' சேசு, டி.எம்.கார்த்திக், 'கேபிஒய்' ராமர், பாலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்..

கடந்த 14-ம் தேதி வெளியான 'அப்பத்தா' பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் படத்தின் 'பணக்காரன் ' என்ற பாடல் இன்று வெளியாகியுள்ளது.இந்த பாடலை வடிவேலு பாடியுள்ளார்.


Next Story