துணிவு - வாரிசு : பொங்கல் விடுமுறை முடிவில் வசூலில் நம்பர் ஒன் யார்...! பாக்ஸ் ஆபிஸ் முழு விவரம்


துணிவு - வாரிசு  : பொங்கல் விடுமுறை முடிவில் வசூலில் நம்பர் ஒன்  யார்...! பாக்ஸ் ஆபிஸ் முழு விவரம்
x
தினத்தந்தி 18 Jan 2023 5:44 AM GMT (Updated: 18 Jan 2023 8:13 AM GMT)

பொங்கல் விடுமுறையும் முடிவுக்கு வந்துவிட்டதால் துணிவு மற்றும் வாரிசு படங்களின் முதல் வாரம் பாக்ஸ் ஆபிஸ் தகவல்களை இப்போது பார்க்கலாம்.

சென்னை

சென்னை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித்குமார் நடித்த 'துணிவு', நடிகர் விஜய் நடித்த 'வாரிசு' ஆகிய திரைப்படங்கள் வெளியானது. ஒரே நாளில் 2 உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளியானதால் இருவரது ரசிகர்களும் உற்சாகம் அடைந்தனர்.

படம் வெளியான தியேட்டர்கள் முன்பு ரசிகர்கள் கட்-அவுட், பேனர் வைத்தும், கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

பொங்கல் விடுமுறையும் முடிவுக்கு வந்துவிட்டதால் துணிவு மற்றும் வாரிசு படங்களின் முதல் வாரம் பாக்ஸ் ஆபிஸ் தகவல்களை இப்போது பார்க்கலாம்.

கடந்த 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் இந்த இரண்டு படங்களுமே வசூலை வாரிக்குவித்து உள்ளன. இதில் பொங்கல் விடுமுறை முடிவில் அதிக கலெக்ஷனை அள்ளியது யார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

விஜய்யின் வாரிசு 5 நாட்களில் 150 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்தது. அடுத்த சில மணி நேரங்களிலேயே அஜித்தின் துணிவு 5 நாட்களில் 175 கோடி கலெக்ஷன் செய்துள்ளதாக தகவல் வெளியானது.


பொங்கல் விடுமுறை தினங்களான 15, 16, 17 என கடந்த 3 நாட்களில் துணிவு படத்துக்கான டிக்கெட் புக்கிங் மீண்டும் விஸ்வரூபமெடுத்தது. அனைத்து காட்சிகளுமே ஹவுஸ்புல் ஆனதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் முதல் 7 நாட்கள் முடிவில் துணிவு திரைப்படம் 200 கோடி வசூலை எட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஒரே வாரத்தில் துணிவுக்கு கிடைத்துள்ள இந்த வசூல், அஜித் ரசிகர்களுக்கும் படக்குழுவினருக்கும் பொங்கல் விருந்தாக அமைந்துள்ளது.

முதல் நாளில் இருந்தே துணிவு படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் தமிழ்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளில் 25 கோடி ரூபாயும், இரண்டாவது நாளில் 14 கோடியும் வசூலித்தது. அதற்கடுத்த நாட்களிலும் சீரான வசூலை வாரி குவித்த துணிவு, இதுவரை 96 கோடியை கடந்துள்ளது. அதன்படி துணிவு திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடி ரூபாய் கலெக்ஷனை கடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் வெளியான அஜித்தின் படங்களில், துணிவு தான் வசூலில் சிறப்பான சம்பவம் செய்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Next Story