பிரமாண்டமாக உருவாகும் 'வேள்பாரி': அப்டேட் கொடுத்த ஷங்கர்


Velpari to be a big hit: Shankar gives an update
x

வேள்பாரி குறித்து இயக்குனர் ஷங்கர் அப்டேட் கொடுத்துள்ளார்.

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் ஷங்கர். இவர் இயக்கிய எந்திரன், இந்தியன், அந்நியன், முதல்வன், சிவாஜி உள்ளிட்ட பல படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. தற்போது இவர், இந்தியன் 2 படத்தை இயக்கியுள்ளார். இதில், கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத் சிங் போன்றோர் நடித்திருக்கின்றனர்.

இந்தியன் 2 திரைப்படம் உலகமுழுவதும் உள்ள திரையரங்குகளில் இன்று வெளியானது. மேலும் ஷங்கர், ராம் சரண் நடிக்கும் 'கேம் சேஞ்சர்' படத்தை இயக்கி வருகிறார். இப்படம் விரைவில் திரைக்குவரவுள்ளது. சமீபத்தில், ஒரு பேட்டியில் இயக்குனர் ஷங்கர் வேள்பாரி குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.

அப்போது அவர், வேள்பாரி நாவல் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும், அதனை மூன்று பாகங்களாக பிரமாண்டமாக எடுக்க இருப்பதாகவும், விரைவில் நடிகர் நடிகைகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் கூறினார். இதனையடுத்து ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

1 More update

Next Story