வெற்றி நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு..!


வெற்றி நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு..!
x

வெற்றி நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

சென்னை,

ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் வெளியான '8 தோட்டாக்கள்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் வெற்றி. இந்த படத்தை தொடர்ந்து ஜீவி படத்தில் நடித்து பலரின் பாராட்டுக்களை பெற்றார். விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்திற்கு சர்வதேச பட விழாக்களிலும் விருதுகள் கிடைத்தன.

அதன்பின்னர் c/o காதல், வனம், ஜோதி உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்த நிலையில் வெற்றி நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

'இரவு' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஜெகதீசன் சுப்பு இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் சந்தான பாரதி, மன்சூர் அலிகான், பொன்னம்பலம், தீபா சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 'இரவு' படத்திற்கு ஶ்ரீனிவாஸ் தயாநிதி ஒளிப்பதிவு செய்கிறார். முத்து கணேஷ் இசையமைக்கிறார்.


Next Story