விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின்


விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ந்தேதி முதல் அடுத்த மாதம் 10-ந்தேதி வரை சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது.

சென்னை

தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ந்தேதி முதல் அடுத்த மாதம் 10-ந்தேதி வரை சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளை சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட செஸ் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.இந்த போட்டியை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்ச்சிக்கான விளம்பரம் ஒன்றை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். அந்த விளம்பரத்தில் முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். இதற்கான படப்பிடிப்பு சென்னை நேப்பியர் பாலத்தில் நடைபெற்றது.

விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இந்த விளம்பரத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.


Related Tags :
Next Story