விஜய் தேவரகொண்டா நடித்துள்ள 'பேமிலி ஸ்டார்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு


விஜய் தேவரகொண்டா நடித்துள்ள பேமிலி ஸ்டார் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
x

இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் சார்பில் தில்ராஜூ மற்றும் சிரிஷ் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

கீதா கோவிந்தம்', 'சர்காரு வாரி பட்டா' படங்களை இயக்கிய பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள திரைப்படம் 'பேமிலி ஸ்டார்'. இந்த படத்தில் 'சீதா ராமம்' புகழ் மிருணாள் தாகூர் கதாநாயகியாக நடித்துள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் சார்பில் தில்ராஜூ மற்றும் சிரிஷ் ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்த படத்துக்கு கோபிசுந்தர் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டைட்டில் டீசர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் வகையில் இருந்தது. இந்த நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'பேமிலி ஸ்டார்' திரைப்படம் வருகிற ஏப்ரல் 5-ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை போஸ்டர் ஒன்றை பகிர்ந்து படக்குழு அறிவித்துள்ளது.

இந்த போஸ்டரில் விஜய் தேவரகொண்டா லுங்கி அணிந்து, தோளில் சாக்குப்பையுடனும் வாயில் ஆதார் அட்டையுடனும் ஓடுவது போல உள்ளது. ஒரு சாதாரண நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மனிதனின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் இந்த போஸ்டர் உள்ளது.



Next Story