விஜய்யின் 'வாரிசு' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு


விஜய்யின் வாரிசு படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
x
தினத்தந்தி 22 Dec 2022 10:45 PM IST (Updated: 22 Dec 2022 10:47 PM IST)
t-max-icont-min-icon

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24ம் தேதி நடைபெறுகிறது

சென்னை,

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வாரிசு'. படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். குடும்பக் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது. அண்மையில் 'வாரிசு' படத்தில் இடம்பெற்றுள்ள 'ரஞ்சிதமே' பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் பாடலை நடிகர் விஜய்யுடன் இணைந்து எம்.எம்.மானசி பாடினார். இதையடுத்து படத்தின் இரண்டாவது பாடலான 'தீ தளபதி' பாடல் வெளியானது. . இந்நிலையில், வாரிசு படத்தின் மூன்றாவது பாடல் சமீபத்தில் வெளியானது .

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24ம் தேதி நடைபெறுகிறது என படக்குழு அறிவித்துள்ளது.இந்த நிலையில் படத்தின் புதிய போஸ்டர் படக்குழு வெளியிட்டுள்ளது.இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .



Related Tags :
Next Story