அட்லி இயக்கத்தில் விஜய்யின் 68-வது படம்?


அட்லி இயக்கத்தில் விஜய்யின் 68-வது படம்?
x

மீண்டும் அட்லி இயக்கும் படத்தில் விஜய் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் படங்களை அட்லி இயக்கி இருந்தார். மீண்டும் இவர்கள் கூட்டணியில் புதிய படம் உருவாகும் என்று எதிர்பார்த்த நிலையில், வெவ்வேறு படங்களுக்கு சென்று விட்டனர். தற்போது ஷாருக்கான் நடிக்கும் ஜவான் இந்தி படத்தை அட்லி இயக்கி வருகிறார். விஜய் வாரிசு படத்தில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் வாரிசு படத்தை வம்சி பைடிபள்ளி இயக்குகிறார். நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இது விஜய்க்கு 66-வது படம். பொங்கலுக்கு திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளனர். வாரிசு படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். அதன் பிறகு மீண்டும் அட்லி இயக்கும் படத்தில் விஜய் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது விஜய்க்கு 68-வது படம்.

ஷாருக்கான் படத்தை முடித்ததும் விஜய் படத்துக்கான திரைக்கதையை உருவாக்கும் பணியை தொடங்க அட்லி திட்டமிட்டு உள்ளார். லோகேஷ் படத்தை முடித்து அட்லி இயக்கும் படத்தில் விஜய் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story