விக்ரம் பிரபு நடித்துள்ள 'ரெய்டு' படத்தின் டீசர் வெளியானது..!

விக்ரம் பிரபு நடித்துள்ள 'ரெய்டு' திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
சென்னை,
அறிமுக இயக்குனர் கார்த்தி இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடித்துள்ள திரைப்படம் 'ரெய்டு'. இந்த திரைப்படம் கன்னடத்தில் சிவராஜ்குமார், தனஞ்சயா நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற 'டகரு' படத்தின் ரீமேக்காகும். இந்த படத்தில் விக்ரம் பிரபு, ஸ்ரீ திவ்யா, அனந்திகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
சாம்.சி.எஸ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு கதிரவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் 'ரெய்டு' படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசரை நடிகர் சிம்பு தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Pleasure to unfold @iamVikramPrabhu 's #Raid Teaser https://t.co/j8rgCacYtf
— Silambarasan TR (@SilambarasanTR_) March 23, 2023
Very impressive! Good luck team @SDsridivya @dir_muthaiya @dir_karthioffl @OpenScreenoffl @SamCSmusic @maran_vj@Ananthika108 @soundar4uall @Danielanniepope @kanishk_offl @vinoth_offl
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





