விக்ரம் நடித்துள்ள 'துருவ நட்சத்திரம்' படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிப்பு


விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிப்பு
x

நடிகர் விக்ரம் நடித்துள்ள 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தின் புதிய டிரைலர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக ரிது வர்மா நடித்துள்ளார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு 2018-ஆம் ஆண்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. இதையடுத்து சமீபத்தில் இந்த திரைப்படம் வருகிற நவம்பர் 24-ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் புதிய டிரைலர் வருகிற 24-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இயக்குனர் கவுதம் மேனன் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.


Next Story