வரவேற்பைப் பெற்ற விக்ரம் வேதா டீசர்


வரவேற்பைப் பெற்ற விக்ரம் வேதா டீசர்
x

இந்தியில் உருவாகும் விக்ரம் வேதா படத்தின் டீசர் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

புஷ்கர் -காயத்ரி இயக்கத்தில் 2017-ம் ஆண்டு வெளியான தமிழ் படம் 'விக்ரம் வேதா'. இந்தப் படத்தில் விஜய்சேதுபதி, மாதவன், கதிர், ஸ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார் உள்பட பலர் நடித்திருந்தனர்.

கமர்ஷியல் ரீதியாக எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் கதையும், திரைக்கதையும் சிறப்பாக அமைந்ததோடு, அதில் நடித்த விஜய்சேதுபதி, மாதவன் ஆகியோரின் கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

இந்தப் படம் ரசிகர்களிடம் மட்டுமல்லாது, விமர்சகர்களிடமும் நல்ல பெயரைப் பெற்றது. மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த 'விக்ரம் வேதா' தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத திரைப்படங்களில் ஒன்று.

இந்தப் படத்தை அதே பெயரில் பாலிவுட்டில் ரீமேக் செய்ய முன்வந்தனர் புஷ்கர் - காயத்ரி. விஜய்சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக்ரோஷனும், மாதவன் கதாபாத்திரத்தில் சயிப் அலிகானும் நடிக்கிறார்கள்.

செப்டம்பர் 30-ந் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தில் டீசர் சமீபத்தில் வெளியானது. அதில் ஹிருத்திக்ரோஷனின் கதாபாத்திரமும் நடிப்பும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. டீசர் வெளியான சில மணி நேரங்களிலேயே 50 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

1 More update

Next Story