விமலின் புதிய படம்
விமல், `துடிக்கும் கரங்கள்' என்று பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் நடிக்கிறார். இதில் நாயகியாக மிஷா நராங் அறிமுகமாகிறார்.
சுரேஷ் மேனன், சதீஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை வேலுதாஸ் டைரக்டு செய்கிறார். படம் குறித்து அவர் கூறும்போது, ``விமல் யூடியூப் சேனல் நடத்துபவராக வருகிறார். இதனால் அவருக்கு செல்வாக்கு மிகுந்த இடத்தில் இருந்து எதிர்ப்புகள் வருகிறது. அதை எப்படி எதிர்கொள்கிறார் என்பது கதை. விமல் நண்பராக சதீஷ் வருகிறார். மும்பையை சேர்ந்த சினேகா குப்தா ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். நகரம் சார்ந்த கதையாக தயாராகி உள்ளது. சுரேஷ் மேனன் இயக்குனர் என்பதால் கதையை புரிந்து எளிதாக நடித்துக் கொடுத்துள்ளார்'' என்றார். ஒளிப்பதிவு: ராம்மி, இசை: ராகவ் பிரசாத்.
Related Tags :
Next Story