இறுதி கட்ட படப்பிடிப்பில் விஷாலின் 'மார்க் ஆண்டனி' - வைரலாகும் புதிய போஸ்டர்


இறுதி கட்ட படப்பிடிப்பில் விஷாலின் மார்க் ஆண்டனி - வைரலாகும் புதிய போஸ்டர்
x

நடிகர் விஷால் நடிக்கும் 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

சென்னை,

'லத்தி' திரைப்படத்தை தொடர்ந்து தற்போது விஷாலின் 33-வது திரைப்படத்தை 'திரிஷா இல்லனா நயன்தாரா', 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இந்த படத்திற்கு 'மார்க் ஆண்டனி' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நடிகை ரித்து வர்மா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் 'மார்க் ஆண்டனி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. இந்த போஸ்டரை நடிகர் எஸ்.ஜே சூர்யா தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


Next Story