"எழுந்து வா இமயமே!"- இயக்குநர் பாரதிராஜாவை நலம் விசாரித்த கவிஞர் வைரமுத்து டுவீட்!


எழுந்து வா இமயமே!- இயக்குநர் பாரதிராஜாவை நலம் விசாரித்த கவிஞர் வைரமுத்து டுவீட்!
x

கவிஞர் வைரமுத்து, இயக்குனர் பாரதிராஜாவை நேரில் சந்தித்து பாட்டு பாடி நலம் விசாரித்துள்ளார்.

சென்னை,

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இயக்குநர் பாரதிராஜாவை சந்தித்து கவிஞர் வைரமுத்து நலம் விசாரித்து பாடல் பாடி உற்சாகமூட்டினார்.

1980-ஆம் ஆண்டு வெளியான நிழல்கள் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. அதன்பின்னர் ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்களை எழுதி ரசிகர்களை கவர்ந்தார்.

இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கன்னத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை பெற்றார். இந்நிலையில் கவிஞர் வைரமுத்து, இயக்குனர் பாரதிராஜாவை நேரில் சந்தித்து பாட்டு பாடி நலம் விசாரித்துள்ளார். இது தொடர்பான வீடியோவை பதிவிட்டு, எழுந்து வா இமயமே என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

1 More update

Next Story