நடிகர் கவின் நடித்துள்ள 'ஸ்டார்' படத்தின் வெளியீடு எப்போது ? வெளியான தகவல்


நடிகர் கவின் நடித்துள்ள ஸ்டார் படத்தின் வெளியீடு எப்போது ? வெளியான தகவல்
x

இந்த படத்தை `பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கி பிரபலமான இளன் டைரக்டு செய்துள்ளார்.

சென்னை,

'டாடா' படத்தின் வெற்றிக்கு பிறகு கவின் நாயகனாக நடிக்கும் புதிய படத்துக்கு `ஸ்டார்' என்று பெயரிடப்பட்டு உள்ளது. இந்தப் படத்தை `பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கி பிரபலமான இளன் டைரக்டு செய்துள்ளார்.

இதன் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் மும்பையில் நடந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தின் அறிமுக பாடல் காட்சியை பிரமாண்ட அரங்கு அமைத்து படமாக்கி உள்ளனர். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அவரது பாடல்கள் இளைய தலைமுறையினரை கவரும் வகையில் இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர். படத்தை பி.வி.எஸ்.என்.பிரசாத், ஶ்ரீநிதி சாகர் ஆகியோர் தயாரிக்கிறார்கள். சமீபத்தில் யுவன் சங்கர் ராஜா பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் தற்போது படம் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி படமானது அடுத்த ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story