'சியான் 62' படத்தின் படப்பிடிப்பு எப்போது ? - வெளியான தகவல்


சியான் 62 படத்தின் படப்பிடிப்பு எப்போது ? - வெளியான தகவல்
x

முன் தயாரிப்பு மற்றும் ஸ்கிரிப்ட் விவாதத்திற்காக விக்ரம் மற்றும் அருண் குமார் கோவா சென்றுள்ளனர்.,

சென்னை,

நடிகர் விக்ரம் தனது 62-வது படத்துக்காக இயக்குனர் எஸ்.யு.அருண்குமாருடன் முதல் முறையாக இணைகிறார். இந்த படத்தை எச்.ஆர். பிக்சர் தயாரிக்கிறது. படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். அருண்குமார் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'சித்தா' திரைப்படத்தை இயக்கியவர். இது குழந்தைகளின் பாதுகாப்பை உணர்வுபூர்வமாக சித்தரித்ததற்காக பாராட்டப்பட்ட படம்.

இந்த நிலையில் 'சியான் 62' படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான முன் தயாரிப்பு மற்றும் ஸ்கிரிப்ட் விவாதத்திற்காக விக்ரம் மற்றும் அருண் குமார் கோவா சென்றுள்ளனர்.


Next Story