'அப்பா இயக்கும் படத்தில் நடிப்பது எப்போது?' - அதிதி சங்கர் பதில்


அப்பா இயக்கும் படத்தில் நடிப்பது எப்போது? - அதிதி சங்கர் பதில்
x

சங்கர் இயக்கும் படத்தில் நடிப்பது எப்போது? என்ற கேள்விக்கு அவரது மகளும், நடிகையுமான அதிதி சங்கர் பதிலளித்தார்.

சென்னை,

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான 'இந்தியன்' படத்தின் 2-ம் பாகம் பிரம்மாண்டமான முறையில் தயாராகி வருகிறது. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'இந்தியன் 2' திரைப்படம் வருகிற ஜூலை 12-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிம்பு, சிவகார்த்திகேயன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ஹெச்.வினோத் உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் இயக்குனர் சங்கரின் மகளும், நடிகையுமான அதிதி சங்கர் கலந்து கொண்டார். அவரிடம், 'உங்கள் அப்பாவின் இயக்கத்தில் நீங்கள் நடிப்பது எப்போது?' என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், "என் அப்பாவைப் பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரியும். அவரிடம் வாய்ப்பு கேட்டு என்னால் அடம்பிடிக்க முடியாது. எனக்கான கதாபாத்திரம் சரியாக அமைந்தால் நிச்சயமாக அப்பா விரைவில் அவரது படத்தில் என்னை நடிக்க வைப்பார்" என்று தெரிவித்தார்.Next Story