"வீடும் வாசலும் விரும்பவில்லை பெண்; கல்வி கேட்கிறாள்" - கவிஞர் வைரமுத்து மகளிர் தின வாழ்த்து


வீடும் வாசலும் விரும்பவில்லை பெண்; கல்வி கேட்கிறாள் - கவிஞர் வைரமுத்து மகளிர் தின வாழ்த்து
x

கவிஞர் வைரமுத்து, கவிதையின் வாயிலாக மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சென்னை,

உலகம் முழுவதும் இன்று 'சர்வதேச மகளிர் தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் கவிஞர் வைரமுத்து, கவிதையின் வாயிலாக மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கதில் பதிவிட்டுள்ளதாவது;-

"மாலையும் நகையும் கேட்கவில்லை பெண்; மதித்தல் கேட்கிறாள்

வீடும் வாசலும் விரும்பவில்லை பெண்; கல்வி கேட்கிறாள்

ஆடம்பரம் அங்கீகாரம் ஆசைப்படவில்லை பெண்; நம்பிக்கை கேட்கிறாள்

கொடுத்துப் பாருங்கள்; அவளே பாதுகாப்பாள் ஆண்களையும்.

உலக மகளிர் திருநாள் வாழ்த்து"

இவ்வாறு கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.Next Story